← Back to Verbs Tamil Medium Student

1. POSITIVE (+)

Explanation: Past Positive sentence என்பது கடந்த காலத்தில் ஒருவர் ஒரு செயலை செய்தார் என்பதை சொல்ல பயன்படும்.
Formula: Subject + DID + Object
Subject DO Verb Example Tamil Meaning
I DID I did my work. நான் என் வேலையை செய்தேன்.
He DID He did his work. அவன் அவனுடைய வேலையை செய்தான்.
She DID She did her work. அவள் அவளுடைய வேலையை செய்தாள்.
It DID It did its work. அது அதன் வேலையை செய்தது.
You DID You did your work. நீங்கள் உங்கள் வேலையை செய்தீர்கள்.
We DID We did our work. நாங்கள் எங்கள் வேலையை செய்தோம்.
They DID They did their work. அவர்கள் அவர்களுடைய வேலையை செய்தார்கள்.
💡 Simple Note:
DID = செய்தேன் / செய்தான் / செய்தாள் / செய்தோம் / செய்தார்கள்
• 📌 Important: DID is the same for all subjects (அனைத்து Subject-களுக்கும் DID மட்டுமே வரும்).

2. NEGATIVE (-)

Explanation: Past Negative sentence என்பது கடந்த காலத்தில் ஒருவர் ஒரு செயலை செய்யவில்லை என்பதை சொல்ல பயன்படும்.
Formula: Subject + DID NOT + Main Verb + ...
Subject Helping Verb Example Tamil Meaning
I DID NOT I did not play cricket. நான் கிரிக்கெட் விளையாடவில்லை.
He DID NOT He did not play cricket. அவன் கிரிக்கெட் விளையாடவில்லை.
She DID NOT She did not play cricket. அவள் கிரிக்கெட் விளையாடவில்லை.
It DID NOT It did not work. அது வேலை செய்யவில்லை.
You DID NOT You did not play cricket. நீங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை.
We DID NOT We did not play cricket. நாங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை.
They DID NOT They did not play cricket. அவர்கள் கிரிக்கெட் விளையாடவில்லை.
✂️ Short Forms (DID NOT = DIDN'T):
• Examples: I didn't play cricket. | He didn't play cricket. | They didn't play cricket.
⚠️ IMPORTANT RULE:
After DID NOT, always use the base form of the main verb.
DID என்பது ஏற்கனவே Past tense-ஐ குறிப்பதால், Main Verb எப்போதும் Base Form-ல் தான் இருக்க வேண்டும்.

He did not play.  |  ❌ He did not played.
They did not work.  |  ❌ They did not worked.

3. POSITIVE QUESTION (+?)

Explanation: Past Positive Question என்பது கடந்த காலத்தில் ஒருவர் ஒரு செயலை செய்தாரா என்று கேட்க பயன்படும்.
📌 Important rule: DID sentence-ன் ஆரம்பத்தில் வரும்.
Formula: DID + Subject + Main Verb + ... ?
Helping Verb Subject Question Tamil Meaning
DID I Did I play cricket? நான் கிரிக்கெட் விளையாடினேனா?
DID He Did he play cricket? அவன் கிரிக்கெட் விளையாடினானா?
DID She Did she play cricket? அவள் கிரிக்கெட் விளையாடினாளா?
DID It Did it work? அது வேலை செய்ததா?
DID You Did you play cricket? நீங்கள் கிரிக்கெட் விளையாடினீரா / விளையாடிநீர்களா?
DID We Did we play cricket? நாம் கிரிக்கெட் விளையாடினோமா?
DID They Did they play cricket? அவர்கள் கிரிக்கெட் விளையாடினார்களா?
🔄 Simple Pattern Comparison:
• Statement: I played cricket.
• Question: Did I play cricket?
📌 Important Rule: After DID, use the base form of the verb.
Did he play cricket?
Did he played cricket?

4. NEGATIVE QUESTION (-?)

Explanation: Past Negative Question என்பது கடந்த காலத்தில் ஒருவர் ஒரு செயலை செய்யவில்லையா என்று கேட்க பயன்படும்.
Formula: DID + Subject + NOT + Main Verb + ... ?
Helping Verb Subject Question Tamil Meaning
DID I Did I not play cricket? நான் கிரிக்கெட் விளையாடவில்லையா?
DID He Did he not play cricket? அவன் கிரிக்கெட் விளையாடவில்லையா?
DID She Did she not play cricket? அவள் கிரிக்கெட் விளையாடவில்லையா?
DID It Did it not work? அது வேலை செய்யவில்லையா?
DID You Did you not play cricket? நீங்கள் கிரிக்கெட் விளையாடவில்லையா?
DID We Did we not play cricket? நாம் கிரிக்கெட் விளையாடவில்லையா?
DID They Did they not play cricket? அவர்கள் கிரிக்கெட் விளையாடவில்லையா?
Common Short Forms (DID NOT → DIDN'T):
Didn't I...?  |  • Didn't he...?  |  • Didn't she...?
Didn't you...?  |  • Didn't we...?  |  • Didn't they...?

Example: Did he not play cricket? ➔ Short form: Didn't he play cricket?
📌 Again Remind: After DID / DIDN'T, use the base form of the main verb.
Didn't he play?
Didn't he played?

📋 FINAL SUMMARY

Type Formula Example
Positive (+) Subject + DID + Object I did my work.
Negative (-) Subject + DID NOT + Main Verb I did not play.
Positive Question (+?) DID + Subject + Main Verb? Did I play?
Negative Question (-?) DID + Subject + NOT + Main Verb? Did I not play?
🧠 நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:
  • Past DO = DID
  • I / He / She / It / You / We / They ➔ DID
  • Positive ➔ DID
  • Negative ➔ DID NOT + Base Verb
  • Question ➔ DID + Subject + Base Verb?
  • Negative Question ➔ DID + Subject + NOT + Base Verb?
  • ⚠️ Important Memory Rule: DID வந்தால் Main Verb Base Form-ல் தான் வரும்.
    ✅ Did he play?  |  ❌ Did he played?
    ✅ He did not play.  |  ❌ He did not played.
  • 📌 Final easy memory: Present ➔ DO / DOES  |  Past ➔ DID  |  Future ➔ WILL DO